அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் தலைப்பு 'டெவில்'?

அஜித் நடிக்கும் ஏகே 62
அஜித் நடிக்கும் ஏகே 62அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் தலைப்பு 'டெவில்'?

மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடிக்கும் 'ஏகே 62' படத்திற்கு 'டெவில்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்க உள்ள 'ஏகே 62' படப்பிடிப்பு மார்ச் 2வது வாரம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், 'ஏகே 62' படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என்று அஜித்தும், லைகா நிறுவனமும் உறுதி செய்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இப்படத்தின் தலைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு 'டெவில்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இது உண்மையில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய படங்களுக்கு தமிழில் தான் தலைப்பு வைப்பார். அவர் இதுவரை இயக்கிய எந்த படத்திற்கும் ஆங்கில வார்த்தையில் அவர் தலைப்பு வைக்கவில்லை. 'முன்தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க', 'மீகாமன்', ' தடம்' என தனது படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தவர் எப்படி அஜித் நடிக்கும் படத்திற்கு 'டெவில்' என பெயர் வைப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே, 'ஏகே 62' படத்திற்கு அழகிய தமிழ் பெயரை மகிழ் திருமேனி சூட்டுவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in