செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்' டைட்டில் லுக் வெளியீடு

செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்' டைட்டில் லுக் வெளியீடு

தனுஷ், இந்துஜா, பாலிவுட் நடிகை எல்லி அவ்ரம் உட்பட பலர் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதற்கிடையே, ‘பீஸ்ட்’, ‘சாணிக் காயிதம்’ படங்களின் மூலம் நடிப்பைத் தொடங்கி இருக்கிற செல்வராகவன் இப்போது ’பகாசூரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை, ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்குகிறார்.

ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியிடப்பட்டது.

ஏப்ரல் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in