என்ன தலைப்பு வைக்கப்படும் ‘ஏகே61’ படத்துக்கு? ‘எக்ஸ்க்ளூஸிவ்’ தகவல்!

என்ன தலைப்பு வைக்கப்படும் ‘ஏகே61’ படத்துக்கு?  ‘எக்ஸ்க்ளூஸிவ்’ தகவல்!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஏகே61’. ஏற்கெனவே, அஜித் நாயகனாக நடித்த 'நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கும் எச்.வினோத் இந்தப் படத்தில் அஜித்துக்கு அசத்தலான கேரக்டர் தந்திருப்பதாகத் திரையுலகில் பேசப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நடிகர் அஜித்தும் பல மாநிலங்களுக்கு பைக்கில் சுற்றுபயணம் மேற்கொண்டார். தற்போது தனது பைக் பயணத்தை முடித்துள்ள அஜித், இன்று சென்னை திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஏகே61 படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஏகே61 படத்தின் பெயர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன. அதன்படி ‘துணிவே துணை’, ‘துணிவு’, ‘கட்ஸ்’, ‘சேலஞ்ச்’ - இவற்றில் இன்று அப்படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in