'டைட்டானிக்- காதலும் கவுந்து போகும்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'டைட்டானிக்- காதலும் கவுந்து போகும்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஞ்சலி, கலையரசன்

’டைட்டானிக்- காதலும் கவுந்து போகும்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்- காதலும் கவுந்து போகும்’. கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இதில் இயக்குநர் பாலாஜி மோகனும், நடிகை காயத்திரியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். எம்.ஜானகிராமன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டே முடிவடைந்த இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ரிலீஸ் ஆகிறது. அதன்படி ஜூன் 24-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

படக்குழுவினர் கூறும்போது, “இது முழுநீள காமெடி திரைப்படமாக இருந்தாலும், நிச்சயம் ஒவ்வொருவரையும் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்க வைக்கும். கிளைமாக்ஸில் வரும் திருப்புமுனை காட்சிகள், ரொமான்டிக் காமெடி படங்களில் வராத அளவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். இது இந்தப் படத்தின் பெரிய பலம்” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in