புதுப்பொலிவுடன் மீண்டும் ரிலீஸ் ஆகிறது `டைட்டானிக்’

புதுப்பொலிவுடன் மீண்டும் ரிலீஸ் ஆகிறது `டைட்டானிக்’

புகழ்பெற்ற ’டைட்டானிக்’ படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு மீண்டும் திரைக்கு வருகிறது.

லியனார்டோ டிகாப்பிரியோ, கேட் வின்ஸ்லெட் நடித்து சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படம், ’டைட்டானிக்’. ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்திலேயே, 1912-ம் ஆண்டு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறையுடன் மோதி மூழ்கியது. இந்த அதிர்ச்சி விபத்தில், அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உண்மைச் சம்பவத்தில், நெகிழ்ச்சியான காதலை இணைத்து ஜேம்ஸ் கேமருன் இயக்கிய படம்தான் ’டைட்டானிக்’.

1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகில் அதிகம் வசூல் சாதனைப் படைத்த படங்களில் ’அவெஞ்சர்: எண்ட்கேம்’, ’அவதார்’ படங்களை அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது, ’டைட்டானிக்’. ஆஸ்கரில் 14 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளை அள்ளிய இந்தப் படம் இப்போதும் ரசிகர்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறது.

புதுப்பொலிவுடன் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, அடுத்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி, காதலர் தினத்தன்று இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது. இதைப் படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in