பரபரப்பு... ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது!

ரவுடி பேபி சூர்யா
ரவுடி பேபி சூர்யா

ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சூர்யா என்பவர், தனது பெயரை ‘ரவுடி பேபி’ என மாற்றி டிக்டாக்கில் வலம் வந்து கொண்டிருந்தார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர், மற்ற சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இவரது பேச்சு மற்றவர்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும், அவரது வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் எழுந்தது.

ரவுடி பேபி சூர்யா
ரவுடி பேபி சூர்யா

இதுமட்டுமல்லாது, சக யூடியூபர்களையும் தகாத வார்த்தையில் பேசி திட்டித்தீர்த்து வந்த இவர் மீது புகார் கொடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதும் செய்யப்பட்டார். இப்போது கோவை யூடியூபர் சித்ராவை மிரட்டியதாக ’டிக்டாக்’ புகழ் ரவுடி பேபி சூர்யாவை சிக்கந்தரை மதுரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in