மது போதையில் கார் ஓட்டிய நடிகை கைது

ஹாலிவுட் காமெடி நடிகை டிஃபானி ஹாடிஸ்
ஹாலிவுட் காமெடி நடிகை டிஃபானி ஹாடிஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற ஹாலிவுட் காமெடி நடிகை கைது செய்யப்பட்டார்.

பிரபல ஹாலிவுட் காமெடி நடிகை டிஃபானி ஹாடிஸ் (Tiffany Haddish). ஸ்கூல் டான்ஸ், மேட் ஃபேமிலிஸ், கேர்ள்ச் ட்ரிப், அங்கிள் ட்ரூவ், த ஓத், நைட் ஸ்கூல், பேட் ட்ரி, த கார்ட் கவுன்டர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

கேர்ஸ் ட்ரிப், த கிச்சன், லக் எ பாஸ் ஆகிய படங்கள் மூலம் பிரபலமான இவர், ’த லாஸ்ட் பிளாக் யுனிகார்ன்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் அட்லான்டாவில் இருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள பீச் ட்ரீ பகுதியில் நேற்று அதிகாலை கார் ஓட்டிச் சென்றார். அவர் தூங்கிக்கொண்டே காரை ஓட்டிச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பீச் ட்ரீ போலீஸார் அவர் காரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர் ஆல்கஹால் அருந்திய அளவை கணக்கிடும் சாதனத்தில் (breathalyzer) ஊதுமாறு போலீஸார் கூறினர். ஆனால் மறுத்துவிட்டார்.

இருந்தாலும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தது தெரியவந்ததை அடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர். பின்னர் 1,666 அமெரிக்க டாலர் பிணைத் தொகையை கட்டியப் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

மது போதையில் நடிகை ஒருவர் கார் ஓட்டி கைது செய்யப்பட்டிருப்பது, ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in