‘துணிவு - வாரிசு’ -நிஜ வெற்றி யாருக்கு?: வெங்கட் பிரபு வாக்கு!

‘துணிவு - வாரிசு’ -நிஜ வெற்றி யாருக்கு?: வெங்கட் பிரபு வாக்கு!

துணிவு, வாரிசு என பொங்கலுக்கு வெளியான இரு திரைப்படங்களில் வெற்றி யாருக்கு என்று தனக்கே உரிய பாணியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

விஜய் நடித்த வாரிசு, அஜித் குமார் நடித்த துணிவு என்று இரு திரைப்படங்கள் இந்த பொங்கலுக்கு நேரடி மோதலாக வெளியாகி உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் - விஜய் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதுவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் பெற்றனர்.

இதனையொட்டி, எந்த திரைப்படம் உள்ளடக்கத்தில் சிறப்பாக உள்ளது என்பதில் தொடங்கி எதற்கு வசூல் அதிகம் என்பது வரை விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. சாமானிய ரசிகர்களுக்கு அப்பால் பிரபலங்களும் இதில் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

துணிவு, வாரிசு என இரு திரைப்படங்களும் வெவ்வேறு ரகங்கள் என்பதாலும், அந்தந்த கதை கோரியதை விஜய்யும், அஜித்தும் ஒத்துழைப்புடன் நல்கி இருப்பதாலும், இப்படங்களை ஒரே தராசில் நிறுத்துவது தடுமாற்றமாக இருந்தது. ஆயினும், கருத்து தெரிவிக்கும் பிரபலங்களைப் பொறுத்த வகையிலும் அவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ள கருத்து வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய பாணியில் பதில் அளித்துள்ள வெங்கட் பிரபு ’உண்மையான வெற்றியாளர், திரையரங்கு உரிமையாளர்தான்’ என்று தெரிவித்துள்ளார். ’அட, ஆமாம்ல..’ என ஏற்றுக்கொள்ளும்படியும் வெங்கட் பிரபுவின் கருத்து வரவேற்பு பெற்று வருகிறது.

அந்தளவுக்கு பொங்கலுக்கு வெளியான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள், அவற்றை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு வசூலை வாரி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in