`துணிவு', 'வாரிசு'க்கு தியேட்டர்களில் கூடுதல் காட்சி: தமிழக அரசு அனுமதி

`துணிவு', 'வாரிசு'க்கு தியேட்டர்களில் கூடுதல் காட்சி: தமிழக அரசு அனுமதி

`துணிவு, 'வாரிசு படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படமும், நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதனிடையே, வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்களுக்கு அதிகாலை 4 மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்தது. மேலும் திரையரங்கு நுழைவு வாயில்களில் பெரிய கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், `துணிவு, 'வாரிசு படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், துணிவு, வாரிசு ஆகிய படங்களுக்கு சிறப்பு காட்சிகளை அனுமதிக்க வேண்டுமென்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி, ஜனவரி 11, 12, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in