‘துணிவு’ பட ‘சில்லா சில்லா’ பாடல் டிச.9-ல் வெளியீடு: கொண்டாட்டத்துக்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்!

‘துணிவு’ பட ‘சில்லா சில்லா’ பாடல் டிச.9-ல் வெளியீடு: கொண்டாட்டத்துக்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்!

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ‘துணிவு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் 2 பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அஜித்தின் துணிவு படத்தின் பாடல் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in