அட்டகாசமான அஜித்: ‘துணிவு’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு!

அட்டகாசமான அஜித்: ‘துணிவு’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு!

அஜித் குமார் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ‘ துணிவு’ படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகியுள்ளது. 2வது போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குநர் ஹெச்.வினோத், “ சம்பவம் இருக்கு” என தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் தனது 61-வது படத்தில் நடித்துவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‘ஏகே 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருப்பதாகவும், ஒரேகட்டமாக படத்தை முழுவதுமாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in