ரிலீஸுக்கு முன்பாகவே இந்தப் பட்டியலில் `துணிவு’ முதலிடம்: கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

ரிலீஸுக்கு முன்பாகவே இந்தப் பட்டியலில் `துணிவு’ முதலிடம்: கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது அவரின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் -போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'துணிவு'. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, சிபி சந்திரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் 'துணிவு' படம் திரையிடுவதற்கு  470-க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தைக் காட்டிலும் 'துணிவு' திரைப்படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், 'துணிவு' படத்தின் வசூல் அதிக அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரைப்படங்களை முன்பதிவு செய்யும் செயலியான 'புக் மை ஷோ' செயலியில் இதுவரை 3 லட்சம் லைக்குகளை துணிவு பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே ‘துணிவு’ படத்தின் இந்த வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in