சென்னையில் 'துணிவு' பட புரமோஷனா?: நடிகர் அஜித்தின் பிஆர்ஓ அதிரடி ட்விட்

சென்னையில் 'துணிவு' பட புரமோஷனா?: நடிகர் அஜித்தின் பிஆர்ஓ அதிரடி ட்விட்

நடிகர் அஜித் நடிக்கும் 'துணிவு' படத்திற்கு சென்னையில் புரமோஷன் நடக்கிறதா என்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் தகவலை வெளியிட்டுள்ளார்.

'வலிமை' படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் 'துணிவு' படத்தில் இணைந்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிக்கு அஜித் ஒப்புக்கொண்டால் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்த படக்குழு திட்டமிட்டதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், " ஒரு நல்ல திரைப்படம் தானாகவே புரமோஷன் செய்து கொள்ளும்" என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 'துணிவு' படத்திற்கான புரமோஷன் நடக்கும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக உள்ளதாகவும், படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in