பிரான்ஸ் படத்துடன் போட்டியிட்ட `துணிவு': டிவி விவாதத்தால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரான்ஸ் படத்துடன் போட்டியிட்ட `துணிவு': டிவி விவாதத்தால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள `துணிவு' படம் பிரான்ஸ் டிவியில் விவாதிக்கபட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'துணிவு' படம் கடந்த 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அதே தேதியில் நடிகர் விஜய் நடித்துள்ள `வாரிசு' படமும் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் 'துணிவு' படமே அதிக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் டிவி விவாதத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள `துணிவு' படம் இடம்பெற்று இருக்கிறது. பிரான்ஸ் மொழி படங்களுடன் `துணிவு' படமும் போட்டியிட்டது. இது அந்நாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இந்திய சினிமா பிரிவில் `துணிவு' திரைப்படம் பிரான்ஸ் டிவியில் விவாதம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான காட்சிகளை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in