‘ஒழுங்கா படம் எடு’ என்று எச்சரித்தார்!: இயக்குநர் மிஷ்கின் பரபரப்பு தகவல்

‘ஒழுங்கா படம் எடு’ என்று எச்சரித்தார்!: இயக்குநர் மிஷ்கின் பரபரப்பு தகவல்

மதுரையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்’ நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர்கள் பிரபாகர், சுந்தர் காளி, எழுத்தாளர் ஷாஜகான், ஊடகவியலாளர் விஜயானந்த் ஆகியோர் பங்கேற்று நூலினை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினர்.

அப்போது, இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், " 'சித்திரம் பேசுதடி' படம் வெளியான பின்னர் மதுரையின் சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பார்த்து ஒருவர் 'ஒழுங்கா படம் எடு' என எச்சரித்து சென்றார். என்னுடைய முதல் ரசிகர் மதுரைக்காரர் தான். நான் பிறந்த ஊர் திருப்பத்தூராக இருந்தாலும், வளர்ந்தது திண்டுக்கல்லாக இருந்தாலும், மதுரையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. மதுரையில் இரவு 1 மணிக்கு சூடாக பருத்திப்பால் கிடைத்தது. வாழ்நாளில் அந்த நேரத்தில், அப்படி ஒரு பானத்தை நான் இது வரை குடித்ததே இல்லை" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " இளையராஜா என்ன வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால், அவருக்கான கைதட்டல்களை நாம் மறுக்கக் கூடாது. மதுரையையும், வைகையையும் எப்படி மறக்க முடியாதோ அது போல, இளையராஜாவையும், பாரதிராஜாவையும் மறக்கவே முடியாது. மதுரை குஞ்சரத்தம்மாள் கதையை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்தக் கதை ஆஸ்கார் வாங்கும் என நம்புகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in