2023 Rewind | சுமார் கதை... சூப்பர் வசூல்... கலெக்‌ஷனைக் குவித்த படங்கள்!

2023 Rewind | சுமார் கதை... சூப்பர் வசூல்... கலெக்‌ஷனைக் குவித்த  படங்கள்!

ஒரு படத்தின் வெற்றி கதையின் தரத்தையும், ரசிகர்களின் வரவேற்பையும் தாண்டி வசூல் தான் தீர்மானிக்கிறது. 100 கோடி வசூல் எல்லாம் இப்போ ஜூஜூபி என்ற நிலையில், 2023ல் வசூல் ரேஸில் ஜெயித்த படங்கள் என்னென்ன என்று ரீவைண்ட் செய்து பார்க்கலாம் வாங்க...

’ஜவான்’:

இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுக இயக்குநராக அடியெடுத்து வைத்த படம் ‘ஜவான்’. ஷாருக்கான் கநாயகனாக நடித்த ’ஜவான்’ மேக்கிங்கில் மிரட்டியிருந்தாலும் கதை சுமாராகவே இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது. வழக்கம் போல ‘ஜவான்’ கதையும் 10,15 தமிழ் படங்களின் திரைக்கதைகளுடன் ஒப்பிடப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியது. யார் என்ன விமர்சனம் முன்வைத்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஷாருக் ரசிகர்கள் ’ஜவான்’ படத்தைக் கொண்டாடி தீர்த்தார்கள். இந்த வருடத்தின் வசூல் சக்கரவர்த்தியாக ரூ.1148 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்திருக்கிறது ‘ஜவான்’.

’அனிமல்’: 

’அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர், ராஷ்மிகா நடித்தப் படம் ‘அனிமல்’. வருட கடைசியில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் தற்போது வரை ரூ.800 வசூலை நெருங்கி வருகிறது. ஆணாதிக்கம் நிறைந்த படம், அதிகளவு வன்முறை என ’அனிமல்’ படத்தின் மீது விமர்சன கல்லடிகள் எறியப்பட்டாலும், காய்த்த மரம் தானே கல்லடி படும் என்கிற கதையாக கோடிகளைக் குவித்து வருகிறது ‘அனிமல்’.

’ஜெயிலர்’:

’ஜெயிலர்’ படத்தில் ரஜினி...
’ஜெயிலர்’ படத்தில் ரஜினி...

’பீஸ்ட்’ படத்தின் தோல்விக்குப் பிறகு நெல்சன் ரஜினியை வைத்து இயக்கிய படம் ‘ஜெயிலர்’. சுமாரான கதை, அதிக அளவிலான வன்முறை என இந்தப் படமும் விமர்சன ரீதியாக அதிருப்தியைத் தந்தது. இருந்தாலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வசூல் சாதனைப் படைத்தது ‘ஜெயிலர்’.

'லியோ’:

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய், லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்த படம் ‘லியோ’. ’ஜெயிலர்’ அதிருப்தியைத் தந்த நிலையில், ‘லியோ’ மீதான எதிர்பார்ப்பு அதிகமிருந்த நிலையில், ’லியோ’வும் ரசிகர்களை ஏமாற்றியது என்றே சொல்ல வேண்டும். தமிழ், இந்தி, தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியான ’லியோ’ திருப்தியை தராவிட்டாலும் கலெக்‌ஷனில் ரூ.500 கோடியைத் தாண்டியது.

’டைகர்3’:

’டைகர்3’ படத்தில்...
’டைகர்3’ படத்தில்...

ஆக்‌ஷன் திரைப்படமாக சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான ‘டைகர்3’ திரைப்படம் சுமார் ரூ.466 கோடி ரூபாயை வசூலித்தது. சமூக வலைத்தளங்களில், ‘டைகர்3’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்த நிலையிலும், படம் வசூலில் சாதித்தது.

’ஆதிபுருஷ்’:

‘

விமர்சன ரீதியாக மோசமான தோல்வியைத் தழுவியது ‘ஆதிபுருஷ்’ திரைப்படம். தெரிந்த ராமாயண கதையை, சுமாரான திரைக்கதை கொண்டு படமாக்கி இருந்தார்கள். படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியானதில் இருந்தே இதன் மோசமான கிராஃபிக்ஸ் பணிகளுக்காக கேலி செய்தனர் ரசிகர்கள். பின்பு கிராஃபிக்ஸ் பணிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்தது. ஆனாலும், அது மோசமானதாகவே படம் வெளியான பின்பும் இருந்தது. படம் ரூ. 353 கோடியை வசூல் செய்தது.

’ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’: 

ரன்வீர் கபூர் மற்றும் அலியாபட் இணைந்து நடித்திருந்த காதல் கதை ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’. கதை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் ரூ.355 கோடி ரூபாய் வசூல் செய்தது.

’பொன்னியின் செல்வன்2’:

எம்.ஜி.ஆர். முதல் பல நடிகர்கள் படமாக்க ஆசைப்பட்ட கதை ‘பொன்னியின் செல்வன்’. இறுதியில் அது மணி ரத்னம் வசமானது. விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என பலரும் நடித்திருந்தனர். கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் படித்த நிறைய பேருக்கு இந்தப் படம் திருப்திப்படுத்தவில்லை. முதல் பாகத்தைக் கொண்டாடிய ரசிகர்களை இரண்டாம் பாகம் கொஞ்சமும் கவரவில்லை. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வசூல் ரூ. 350 கோடி.

x
காமதேனு
kamadenu.hindutamil.in