
’குஷி’ முதல் ’கிங் ஆஃப் கொத்தா’ வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
துல்கர் சல்மான், ஐஸ்வர்யா நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் நாளை அதாவது செப்டம்பர் 29 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அதேபோல சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘குஷி’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகிறது.
சிறு பட்ஜெட் படமாக ஜிவி பிரகாஷ், கெளரி கிஷன் நடிப்பில், கார்த்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அடியே’. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி ஒரு மாதம் ஆகும் நிலையில், இந்தத் திரைப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. இந்தத் தலைமுறை அதிகம் அறிந்திடாத தபால்காரரின் கதையாக வெளியான ‘ஹர்காரா’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகிறது.
இதுமட்டுமல்லாது, கிரிக்கெட்டர் தோனியின் முதல் தமிழ்ப்படத் தயாரிப்பாக ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான ‘லெட்ஸ் கெட் மேரிட்’ திரைப்படம் இன்று பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.