பிக் பாஸ்; ஸ்கெட்ச் போட்ட போட்டியாளர்கள்: இந்த வாரம் வெளியேறுவது இவர் தானா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடக்க ஐந்து பேர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே நுழைந்தனர். கானா பாலா, அன்ன பாரதி, தினேஷ், விஜே அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ ஆகியோர்தான் அந்த ஐந்து பேர். வந்த முதல் வாரத்திலேயே அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது மட்டுமல்லாமல், அவர்களின் பெயர்களையும் பிக் பாஸ் இல்லத்தினர் நாமினேட் செய்தனர்.

ரவீனா, மணிச்சந்திரா
ரவீனா, மணிச்சந்திரா

அந்த வகையில், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்தான விவரம் வெளியாகியுள்ளது. இந்த வாரம் மாயா, ஐஷு, ஆர்.ஜே.பிராவோ, மணி, அக்‌ஷயா, அன்ன பாரதி, கானா பாலா, தினேஷ் மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நாமினேஷனில் பட்டியலில் உள்ளனர்.

அன்ன பாரதி
அன்ன பாரதி

இதில் குறைந்த மக்கள் வாக்குகளின் அடிப்படையில் பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி வெளியேற இருக்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும், ஐஷூ-நிக்சன் காதல் விவகாரம், பிரதீப்பின் எல்லை மீறிய பேச்சு போன்ற விவகாரங்களையும் இந்த வாரம் கமல்ஹாசன் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in