இயக்குநர் விக்னேஷ்சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளங்கள் தங்களை ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக கொண்டு சேர்க்கும் ஒரு தளமாக திரை நட்சத்திரங்கள் பார்க்கின்றனர். அந்த வகையில், ட்விட்டர் ட்ரெண்டிங் தளமாகவே இருக்கிறது.
அங்கு கிட்டத்தட்ட 2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த நிலையில், திடீரென தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்பதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கம் சர்க்கிள் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன் , ‘யார் இந்த சர்க்கிள்? என்னுடைய ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயம் மிகவும் பயம் தரக்கூடியதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை தன்னுடைய மகனுடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து " வெற்றி, பாராட்டு தரும் அனுபவத்தை விடவும் தோல்வி அவமானம் கற்றுத் தரும் பாடம் மிகப்பெரியது" எனவும், சீக்கிரம் தன்னுடைய அடுத்த படம் குறித்தும் அறிவிப்பதாகவும் விக்னேஷ்சிவன் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தக் காலம் தன்னுடைய மகன்களோடு நேரம் செலவிட கிடைத்ததையும் குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ்சிவன். இவரது அடுத்த படம், பிரதீப் ரங்கநாதனுடன் இணைய இருக்கிறார். விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.