விமானம் ஓட்டும் பிரபல தமிழ் நடிகர்: வைரலாகும் வீடியோ

விமானம் ஓட்டும் பிரபல தமிழ் நடிகர்: வைரலாகும் வீடியோ

பிரபல நடிகர் விமானம் ஓட்டும் வீடியோவும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது

தமிழில், 'உன்னாலே உன்னாலே' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய் ராய். மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ படத்தில் வில்லனாக நடித்தார். இதையடுத்து, சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களிலும் வில்லனாக நடித்தார்.

இவர் நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். விமலா ராமன், தமிழில் பொய், ராமன் தேடிய சீதை படங்களில் நடித்தவர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் நடிகர் வினய் விமானம் ஓட்டும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விமலா ராமனுடன் வினய் ராய்
விமலா ராமனுடன் வினய் ராய்

அதற்கு கருத்துத் தெரிவித்துள்ள நடிகை விமலா ராமன், கனவு நனவானது என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களும் வினய் ராய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர் விமானம் ஓட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.