வீடியோவால் அதிர்ச்சி... 'தற்கொலை செய்யப் போகிறேன்'... கண்ணீர் மல்க பேசிய நடிகர் மாயம்!

நடிகர் எல்.வி.சுரேஷ்
நடிகர் எல்.வி.சுரேஷ்

தற்கொலை செய்யப் போகிறேன் என்று தமிழ் திரைப்பட இயக்குநரும். நடிகருமான எல்.வி.சுரேஷ் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு மாயமாகியுள்ளது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பூ போன்ற காதல்' என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தவர் எல்.வி.சுரேஷ். இந்த படம் சரியாக போகவில்லை என்பதால் தான் கடனில் சிக்கித் தவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இப்படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கண்ணீர் மல்க அவர் பேசியுள்ள வீடியோ திரைத்துறையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டதோடு எல்.வி.சுரேஷ் மாயமாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிலை இதுவாக உள்ளது எனவும் இதனால் திரைத்துறையும் ரசிகர்களும் சிறுபட்ஜெட் படங்களைப் புறக்கணிக்காமல் ஆதரவு தர வேண்டும் எனவும் திரைத்துறைக்குள் குரல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in