இந்தியில் சல்மான் கானுடன் மோதும் அஜித் பட வில்லன்!

இந்தியில் சல்மான் கானுடன் மோதும் அஜித் பட வில்லன்!

சல்மான் கானின் அடுத்தப் படத்தில் அவருக்கு வில்லனாக அஜித்குமார் பட நடிகர் நடிக்கிறார்.

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவர் இப்போது, ’கபி ஈத் கபி திவாளி’ என்ற படத்தைத் தயாரித்து நடிக்க இருக்கிறார். பர்ஹத் சாம்ஜி இயக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இதில், தெலுங்கு ஹீரோ வெங்கடே ஷ் உட்பட பலர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிர சாத் இசை அமைக்கிறார்.

ஜெகபதி பாபு
ஜெகபதி பாபு

மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அனலரசு சண்டைக் காட்சிகளை அமைக்க இருக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு மெயின் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னாள் ஹீரோ வான ஜெகபதி பாபு, இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சல்மான் கான் படம் மூலம் இந்தியிலும் வில்லனாக அறிமுகமாகிறார்.

நடிகர் ஜெகபதி பாபு, தமிழில் விக்ரமின் தாண்டவம், ரஜினியின் லிங்கா, அண்ணாத்த, விஷாலின் கத்தி சண்டை, அஜித்தின் விஸ்வாசம், விஜய் சேதுபதியின் லாபம் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in