
‘துணிவு’ படத்தில் இந்த ஒரு காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
'நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகியப் படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘துணிவு’. படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 1987-ல் பஞ்சாபில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வங்கி கொள்ளை சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கைன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க முதல் பாடலான ’சில்லா சில்லா’-வை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில், கதை எழுதப்பட்டுள்ளது.
இதில் நடிகர் அஜித் மற்றும் ஜான் கொக்கைனுக்கு இடையில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் நடிகர் அஜித் நடித்து வெளியானப் படங்களிலேயே இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் பேசப்படும் எனவும் சொல்லப்படுகிறது.