
தன் காதல் கணவருடன் திருமணம் ஆன சில மாதங்களிலேயே பிரபல நடிகர் விவாகரத்தை அறிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் லூகாஸ் கேஜ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செலிபிரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட் கிறிஸ் ஆப்பிள்டன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது திருமணம் ஆன சில மாதங்களிலேயே இந்த ஜோடி தாங்கள் பிரிவதாக விவாகரத்தை அறிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சலில் உள்ள விவாகரத்து பதிவுகளின் படி இவர்கள் பிரிவதற்கான காரணமாக, இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 10ம் தேதி இவர்கள் விவாகரத்து நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகையும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியனின் சிகையலங்கார நிபுணராக அறியப்பட்ட 40 வயதான கிறிஸ் அப்பிள்டன், இந்த வருடம் ஏப்ரல் 22 அன்று லாஸ் வேகாஸ் விழாவில் தனது 28 வயது காதலரும் நடிகருமான கேஜை மணந்தார். லிட்டில் ஒயிட் சேப்பலில் நடைபெற்ற திருமணத்தை கர்தாஷியன் நடத்தி வைத்தார். இந்த வருடம் பிப்ரவரியில் இருவரும் தங்களது உறவை பொதுவில் அறிவித்தனர். மற்றும் லாஸ் வேகாஸில் அவர்களின் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட இருவரும் வெளியில் டேட்டிங் சென்ற புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில், இவர்கள் விவாகரத்தை அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!