`சாதித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'- ஹீரோயினான `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை நெகிழ்ச்சி

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை காவ்யா ஹீரோயினாகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சமீபத்தில் நிறைவு பெற்றது. விரைவில் இதன் இரண்டாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலுக்கு மட்டுமல்லாது, இதில் நடித்து வந்த நடிகர்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

குறிப்பாக, கதிர்-முல்லை கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருந்தனர். முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்த சித்ராவின் எதிர்பாராத தற்கொலைக்குப் பின்னர் யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த காவ்யா அந்த இடத்திற்கு வந்தார்.

அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்ததால், அந்த சீரியலில் நடித்த சில மாதங்களிலேயே விலகினார். படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஒரு படத்தின் கதாநாயகியாகி உள்ளார். எந்தவொரு பின்புலமும் இல்லாமல், சீரியல் பின்பு சினிமா என தான் சாதித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என காவ்யா கூறியுள்ளார். ஹீரோயினாகி உள்ள காவ்யாவுக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in