போவதற்கு முன்பே பஞ்சாயத்து... அந்த நடிகருக்குப் பதிலாக பிக் பாஸூக்குள் போவது யார்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போவதற்கு முன்பே பிரபல சீரியல் நடிகருக்கும் தொலைக்காட்சி தரப்புக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்துக் காரணமாக வேறு நடிகர் தற்போது உள்ளே போக இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் அதன் போட்டியாளர்கள் குறித்துத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் தேர்வு விஜய் டிவி பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள், சினிமாவில் மார்க்கெட் குறைந்த நடிகர், நடிகையர்கள், வெளிநாட்டு மாடல்கள், பாடகர்கள், சோஷியல் மீடியா பிரபலங்கள் என கலவையாக இருக்கும். அந்த வகையில், இந்த சீசனிலும் நடிகர்கள் ரவீனா, பப்லு பிரித்விராஜ், அப்பாஸ், ஜோவிகா, மூன்நிலா, அனன்யா, விஜே அர்ச்சனா, ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் & சரவணன்...
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் & சரவணன்...

இந்த லிஸ்ட்டில் இருந்து தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் வெளியேறுகிறார் என சொல்லப்படுகிறது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில், இதன் இரண்டாவது சீசனும் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில்தான் நடிகர் குமரனுக்கும் சீரியல் தரப்புக்கும் பிரச்சினை உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சினை பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் எதிரொலிக்க அவருக்குப் பதிலாகத் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் சரவணன் உள்ளே நுழைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in