பிழைப்புக்காகக் கழிவறையை சுத்தம் செய்த பிரபல நடிகை... வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை மஹிராகான்
நடிகை மஹிராகான்

சினிமாவில் நுழைவதற்கு முன் கழிவறையை சுத்தம் செய்தேன் என பிரபல நடிகை சொன்னத் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை மஹிராகான் மீடியாவில் தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் பிரபல பாகிஸ்தானிய இயக்குநர் ஷோயப் மன்சூர் இயக்கிய 'போல்' என்ற திரைப்படத்தில் நடித்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 2017ல், 'ரயீஸ்' படத்தில் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படமும் அவருக்கு வெற்றியைக் கொடுத்து உதவியது.

இந்த நிலையில், தனது சமீபத்தியப் பேட்டி ஒன்றில் தனது படிப்பிற்காக 17 வயதில் கலிஃபோர்னியா சென்றபோது சந்தித்தத் துயரங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஷாருக்கானுடன் மஹிராகான்
ஷாருக்கானுடன் மஹிராகான்

அந்தப் பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, "நான் வாழ்க்கையில் கடினமான நேரங்களையும் பார்த்திருக்கிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த காலத்தில் தரையை துடைத்தேன், கழிவறைகளை சுத்தம் செய்துள்ளேன். இது எளிதான பயணம் அல்ல, ஆனால் இது ஒரு பெரிய விஷயம்" எனக் கூறியுள்ளார்.

மஹிராகான் 2007ல் அலி அஸ்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2015ல் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு அஸ்லான் என்ற மகன் பிறந்தார். சமீபத்தில் தொழிலதிபர் சலீம் கரீமை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகை இவ்வாறு தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in