சோகம்... இரண்டு தேசிய விருது வாங்கிய பிரபல தயாரிப்பாளர் மரணம்

பி.வி.கங்காதரன்
பி.வி.கங்காதரன்

இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் வயது மூப்புக் காரணமாக இன்று காலமானார்.

பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.வி.கங்காதரன் (80) கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ஒரு வாரத்துக்கும் மேலாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனிக்காமல் இன்று காலை 6 மணியளவில் காலமானார். 

இவர் கிரஹலட்சுமி புரொடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் புரோடக் ஷன் என்கிற இருபதுக்கும் மேற்பட்ட பல மலையாள படங்களை தயாரித்துள்ளார். 'ஒரு வடக்கன் வீரகதா', 'அசுவிண்டே அம்மா', 'தூவல் கொட்டாரம்' மற்றும் போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பி.வி.கங்காதரன்
பி.வி.கங்காதரன்

தயாரிப்பாளராக அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும், ஐந்து கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார். மேலும் மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in