பிக் பாஸ் வீட்டிற்குள் எம்.எல்.ஏ: கொந்தளித்த ரசிகர்கள்!

பிக் பாஸ்
பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஒருவர் நுழைந்திருக்கிறார்.

பிக் பாஸ் கன்னடம் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பிக் பாஸ் இல்லத்திற்கு ‘777 சார்லி’ பட நாய் உள்ளே நுழைந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர் போட்டியாளராக நுழைந்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் காதாரத் துறை அமைச்சர் கே.சுதாகரை எதிர்த்து, சிக்கபல்லாப்பூர் தொகுதியில் இவரிடம் உதவியாளராக இருந்த பிரதீப் ஈஸ்வர் போட்டியிட்டு 10,642 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருப்பது பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் சிலர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை டேக் செய்து, பிரதீப் ஈஸ்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அவரை மக்கள் சேவை செய்யவே எம்.எல்.ஏ.வாக மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதை விடுத்து அவர் பிக் பாஸ் கன்னடத்தில் பங்கேற்றிருப்பது ரசிகக்கக்கூடியதாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in