நடிகை ரெஞ்சுஷா தூக்கிட்டுத் தற்கொலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை ரெஞ்சுஷா மேனன்
நடிகை ரெஞ்சுஷா மேனன்

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நடிகை ரெஞ்சுஷா மேனன் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரெஞ்சுஷா மேனன். 35 வயதான ரெஞ்சுஷா, திருவனந்தபுரத்தில் உள்ள தனது இல்லத்தில், நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரத்தில் தனது கணவர் மனோஜூடன் வசித்து வந்த நடிகை ரெஞ்சுஷா, கடந்த சில நாட்களாக கடன் பிரச்சினையால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் மனோஜ் தொலைக்காட்சித் துறையில் வேலை பார்க்கிறார்.

திரைத்துறையில் மட்டுமல்லாது சீரியலிலும் நடித்து வந்தார் ரெஞ்சுஷா. ‘ஆனந்தராகம்’, ‘வரன் டாக்டரானு’ போன்றவற்றிலும் நடித்தார். ’எண்டே மாதவு’, ‘மிஸஸ். ஹிட்லர்’ ஆகிய தொடர்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

நடிகை ரெஞ்சுஷா மேனன்
நடிகை ரெஞ்சுஷா மேனன்

நடிப்பு மட்டுமல்லாமல் பரத நாட்டியக் கலைஞராகவும் வலம் வந்த ரெஞ்சுஷா பொருளாதாரப் பிரச்சினைகளால் தடுமாறி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அவரது பெட்ரூமில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in