சமந்தாவை மறுபடியும் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?- ரசிகரின் கேள்விக்கு நாகசைதன்யா அளித்த சூப்பர் பதில்

சமந்தாவை மறுபடியும் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?- ரசிகரின் கேள்விக்கு நாகசைதன்யா அளித்த சூப்பர் பதில்

தனது முன்னாள் மனைவி சமந்தாவை மீண்டும் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு நாக சைதன்யா பதில் அளித்துள்ளார்.

ஆமீர்கான் நடித்து தயாரித்திருக்கும் படம் ‘லால் சிங் சத்தா’. இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான எதிர்ப்பார்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக படக்குழு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் ஆமீர் கானின் நண்பன் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். பாலிவுட்டில் இது அவரது அறிமுக படம். இதற்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் புரோமோஷனுக்காக நடிகர் நாக சைதன்யா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அதில் ஒருவர், ‘உங்கள் முன்னாள் மனைவி சமந்தாவை நீங்கள் இப்போது நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு நாகசைதன்யா, ‘அவரை பார்த்து புன்னகைத்து, ஹாய் சொல்லி, கட்டிப்பிடிப்பேன்’ என கூறியுள்ள பதில் தான் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்ற போது நாக சைதன்யா பற்றி அவர் பேசியிருந்தார். ‘என்னையும் நாக சைதன்யாவையும் ஒரு அறையில் விட்டால் அங்கு கூர்மையான ஆயுதங்களும் நிச்சயம் இருக்க வேண்டும்’ என சமந்தா அப்போது கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னுடைய வேலை மற்றும் தனிப்பட்ட வேலைகள் பற்றி நாக சைதன்யா முன்பு ஒருமுறை பேசிய போது, ‘என்னுடைய வேலை மற்றும் தனிப்பட்ட வேலைகளை எப்போதுமே நான் தனியாக தான் பார்த்து கொள்வேன். இரண்டையும் குழப்பி கொள்ள மாட்டேன். ஆனால், எப்போது என் வேலையை விட என் தனிப்பட்ட வாழ்க்கை தலைப்பு செய்தி ஆகிறதோ அப்போது நான் இன்னும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எனக்கு சொல்லி கொள்வேன்’ என கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in