'அப்பா, அம்மா, தங்கச்சி, இதுதான் நாங்க’: பேமிலி போட்டோ பகிர்ந்த ராஷ்மிகா!

'அப்பா, அம்மா, தங்கச்சி, இதுதான் நாங்க’: பேமிலி போட்டோ பகிர்ந்த ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள குடும்பப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்ததால், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கார்த்தியின் ’சுல்தான்’ படம் மூலம் தமிழுக்கும் வந்த ராஷ்மிகா, வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தியில் அவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ’குட்பை’, ரன்பிர் கபூருடன் ’அனிமல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ’புஷ்பா 2’ படமும் இருக்கிறது.

தந்தை  மதன் மந்தனா, அம்மா சுமன், தங்கை ஷிமன் உடன் நடிகை ராஷ்மிகா
தந்தை மதன் மந்தனா, அம்மா சுமன், தங்கை ஷிமன் உடன் நடிகை ராஷ்மிகா

’நேஷனல் கிரஷ்’ என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது மற்றும் தான் சார்ந்த புகைப் படங்களை பதிவிட்டு வருபவர்.

அவர் புதிதாக, தனது குடும்ப புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தந்தை மதன் மந்தனா, அம்மா சுமன் மந்தனா, தங்கை ஷிமன் மந்தனா ஆகியோர் சிரித்தபடி உள்ளனர். கேப்ஷனாக,"இதுதான் மந்தனா குடும்பம். நீங்கள்தான் எங்கள் முகங்களில் புன்னகையை வரவழைக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in