`வாரிசு’ தெலுங்கில் வெளியாக தாமதமாவது ஏன்?- என்ன சொல்கிறார் தயாரிப்பாளர் தில்ராஜூ!

`வாரிசு’ தெலுங்கில் வெளியாக தாமதமாவது ஏன்?- என்ன சொல்கிறார் தயாரிப்பாளர் தில்ராஜூ!

நடிகர் விஜய்யின் ‘வாரசுடு’ படம் தெலுங்கில் தாமதமாக வெளியாக என்ன காரணம் என்பதை தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

’வாரிசு’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘வாரசுடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஜனவரி 11-ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில், தெலுங்கில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது. ’வாரசுடு’ வெளியிடு ஜனவரி 14-ம் தேதி தள்ளிப் போனதற்குத் தயாரிப்பாளர் தில்ராஜூ விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, ‘சங்கராந்தி பண்டிகை அன்று வெளியாகும் நமது தெலுங்கு கதாநாயகர்களது படங்களான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய படங்களை முதலில் தியேட்டரில் பாருங்கள். இதன் காரணமாகதான் நாங்கள் ‘வாரசுடு’ படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம். பட வெளியீடு தள்ளிப் போவதால் நிச்சயம் தெலுங்கு வெர்ஷனின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் என்பது பாதிப்படையாது. படத்தின் எமோஷன்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகும். தமிழ்நாட்டில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹைதராபாத்தில் பட வெளியீட்டிற்கு முன்பு நடிகர் விஜய்யை படத்தை புரமோட் செய்வதற்காக அழைத்து வர முயற்சி செய்வதாகவும் தில் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், இன்று ‘வாரிசு’ படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கை நடிகர் விஜய் பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in