'லால் சிங் சத்தா' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக இதுதான் காரணம்: நாக சைதன்யா விளக்கம்

'லால் சிங் சத்தா' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக இதுதான் காரணம்: நாக சைதன்யா விளக்கம்

'லால் சிங் சத்தா' என்ற இந்திப் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியது ஏன்? என்பது குறித்து நடிகர் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார்

அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாக்கும் 'லால் சிங் சத்தா' என்ற இந்திப் படத்தை தயாரித்து நடிக்கிறார் அமீர்கான். நடிகை கரீனா கபூர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் வரும் 11-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யா கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதால், நாக சைதன்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதற்காக காரணம் குறித்து நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். செய்தித் தளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் அறிந்த வரையில் சில தேதி பிரச்சினையால் விஜய்சேதுபதியால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்பட்டது. தொடர்ந்து அது படத்தை பாதிக்காத வகையில், என்னுடைய கதாபாத்திரம், நான் எங்கிருந்து வந்தேன் என்பதை அடிப்படையாக கொண்டு மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்குப் பையனாகவும், இயற்கையாகவே இந்தியில் சில தெலுங்கு பேசும் சொற்கள் உள்ளதாலும், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் வசதியாக இருந்தது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in