`என் கருணைக்கும் எக்ஸ்பயரி தேதி இருக்கலாம்'- சமந்தா கொந்தளிப்புக்கு என்ன காரணம்?

`என் கருணைக்கும் எக்ஸ்பயரி தேதி இருக்கலாம்'- சமந்தா கொந்தளிப்புக்கு என்ன காரணம்?

என் மவுனத்தை அறியாமை என நினைக்க வேண்டாம் என்ற நடிகை சமந்தாவின் ட்வீட், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார், சமந்தா. அவர், விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. அடுத்து சாகுந்தலம் படத்தை முடித்துள்ள அவர், யசோதா படத்தில் நடித்துவருகிறார். பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் நடிகை சமந்தா பதிவிட்ட எச்சரிக்கை ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில், ``என் மவுனத்தை அறியாமை என்றும் என் அமைதியை ஏற்றுக் கொள்வது என்றும் என் அன்பை பலவீனம் என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். என் கருணைக்கும் எக்ஸ்பயரி தேதி இருக்கலாம்'' என பதிவிட்டுள்ளார்.

யாருக்காக இப்படி பதிவிட்டுள்ளார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்த ட்வீட்டுக்கான காரணம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதாவது, நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விவாகரத்து முடிவை அறிவித்த பின் சமந்தாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்த பிறகு, நடிகை சமந்தாவை மீண்டும் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். குடும்ப வாழ்க்கைக்கு காஜல் எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தொடங்கி சமந்தாவை விமர்சித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த நடிகை சமந்தா அப்படி ட்வீட் செய்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.