
விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ’தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல ஹீரோ நடிக்க இருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம், ’தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், இயக்குநர் மகேந்திரன், நடிகை மீனாவின் மகள் நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் தெலுங்கில், ’போலீசுடு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் பெரிய வெற்றி பெற வில்லை. இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். இதில் ரவி தேஜா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பவன் கல்யாண் நடிக்க இருக்கிறார்.
பிரபாஸ் நடித்த ’சாஹோ’ படத்தை இயக்கிய சுஜித் இந்தப் படத்தை இயக்குகிறார். ரீமேக் படங்கள், பவன் கல்யாணுக்கு எப்போதும் கை கொடுக்கும் என்பதால், தெறி ரீமேக்கில் அவர் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜமவுலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ படத்தைத் தயாரித்த டிவிவி தனய்யா இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார்.