விஜய்யின் 'வாரிசு' படத்தில் இணைந்தார் பிரபல நடிகை!

விஜய்யின் 'வாரிசு' படத்தில் இணைந்தார் பிரபல நடிகை!

விஜய் நடித்து வரும் 'வாரிசு’ படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து, வம்சி பைடிபள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா உட்பட பலர் நடிக்கின்றனர். குடும்பக் கதையை கொண்ட படம் என்பதால் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகை குஷ்பு இப்போது இணைந்துள்ளார்.

விஜய்யுடன் அவர் எடுத்த புகைப்படம் சமீபத்தில் வைரலான நிலையில், வாரிசு படத்தில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுபற்றி விசாரித்தபோது படக்குழு அவர் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நடிகை குஷ்பு, விஜய்யுடன் மின்சார கண்ணா, வில்லு படங்களில் நடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in