`இந்த நாள் மறக்க முடியாதது'- ரஜினி உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி

`இந்த நாள் மறக்க முடியாதது'- ரஜினி உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி

`சிவாஜி’ படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை ஒட்டி இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஷங்கர்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘ஜீன்ஸ்’, ‘இந்தியன்’ ‘அந்நியன்’ என பல வெற்றி படங்களை கொடுத்த ஷங்கர், கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சிவாஜி- தி பாஸ்’. கதாநாயகியாக ஷ்ரேயா நடித்திருக்க விவேக், சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகின்றன. இதனை ஒட்டி இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷங்கர், "எங்கள் ‘சிவாஜி- தி பாஸ்’ ரஜினிகாந்த் சாரை சந்தித்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. அவருக்கும் சரி, எனக்கும் சரி இந்த நாள் என்பது மறக்க முடியாதது. #15YearsOfSivaji என்பதுதான் அதற்கான காரணம். இந்த நாளை எப்போதும் நாங்கள் நினைவில் வைத்திருப்போம். இன்று உங்களை சந்தித்ததில் எனக்கு கிடைத்திருக்கும் எனர்ஜி, அன்பு மற்றும் நேர்மறையான எண்ணம் போன்றவை என்னுடைய நாளை சிறப்பானதாக மாற்றி இருக்கிறது" என்று உற்சாகத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in