குஷ்பு திடீர் விலகல்... மைக் மோகனுக்கு ஜோடியான பிரபல நடிகை!

’ஹரா’ மோகன்-  அனுமோல்
’ஹரா’ மோகன்- அனுமோல்

நடிகர் மோகனின் கம்பேக் படமான ‘ஹரா’வில் நடிகை குஷ்புவுக்குப் பதிலாக வேறொரு நடிகை மாற்றப்பட்டுள்ளது குறித்து படக்குழு புதிய அப்டேட் கொடுத்துள்ளது.

வெள்ளித்திரை நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் மைக் மோகன். தற்போது, சினிமாவில் பதினான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘ஹரா’ படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் முதலில் நடிகை குஷ்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

’ஹரா’ மோகன்-அனுமோல்
’ஹரா’ மோகன்-அனுமோல்

ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகை அனுமோல் மோகன் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், “இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே எனக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கெனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

’ஹரா’ மோகன்
’ஹரா’ மோகன்

இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் 'ஹரா' வெளியாகும்” என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை 'ஹரா' வலியுறுத்துகிறது என்கிறது படக்குழு. இந்தப் படம் தவிர்த்து, ‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in