அது நடந்தால் நிர்வாணமாக ஓடுவேன்... நடிகையின் ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

நடிகை ரேகா போஜ்
நடிகை ரேகா போஜ்

``உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்'' என நடிகை பகிரங்கமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா மோத இருக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என நடிகை கூறியுள்ள ஸ்டேட்மென்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்காக இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கு நடிகை ரேகா போஜ், இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக செல்வேன் எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in