Bigg Boss7: மனைவியின் ஆசையை நிறைவேற்ற பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபல சின்னத்திரை நடிகர்!

பிக் பாஸ்7...
பிக் பாஸ்7...

டைட்டில் வெல்ல வேண்டும் என்ற தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதாக பிரபல சின்னத்திரை நடிகர் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம்-சந்திப்போம்’ போன்ற சீரியல்களில் ஒன்றாக நடித்து காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஜோடி ரச்சிதா தினேஷ் ஜோடி. ஆனால், திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரச்சிதாவுடன் இணைந்து வாழ தினேஷ் பல முயற்சிகள் எடுத்தாலும் ரச்சிதா பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறார்.

நடிகை ரச்சிதா
நடிகை ரச்சிதா

இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகாமல் இருக்கும் நிலையில், கடந்த ஆறாவது பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் ரச்சிதா. அதில் இருந்தவரை தினேஷ் குறித்து அவர் எதுவுமே வாய் திறக்கவில்லை. அதேபோல, அந்த சீசனில் தினேஷ் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டடது. பிக் பாஸ் மூலம் ரச்சிதாவுடன் இணையலாம் என எதிர்பார்த்தவருக்கு அந்த வாய்ப்பு மிஸ் ஆனது.

தினேஷ் - ரச்சிதா
தினேஷ் - ரச்சிதா

சமீபத்தில்கூட ரச்சிதா தினேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது பரபரப்பானது. மேலும், ரச்சிதாவின் தந்தை மறைவுக்கும் பெங்களூர் சென்று அஞ்சலி செலுத்தினார் தினேஷ். இந்த நிலையில் தான், இந்த பிக் பாஸ்7 சீசனில் தினேஷூக்கு வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைய மீண்டும் வாய்ப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் டைட்டில் வெல்ல வேண்டும் என்ற ரச்சிதாவின் ஆசையை இந்த சீசனில் நிறைவேற்றி அவருக்கு சமர்ப்பிக்க இருக்கிறார் தினேஷ் என்கிறனர் அவரது நண்பர்கள் வட்டாரம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in