வசூலில் கலக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ : மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!
தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்' திரைப்படம், குடும்பத்துடன் ரசிக்கவைக்கும் ஃபீல் குட் படம் என்று பெயரெடுத்து தொடர்ந்து 10 நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பிவருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘திருச்சிற்றம்பலம்', திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூல் ரீதியாகவும் இப்படத்துக்குப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

கடந்த 9 நாட்களில் 70 கோடி ரூபாயைக் கடந்திருந்த இப்படம் நேற்றைய முடிவில் சுமார் 75 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இன்றைக்குக் கண்டிப்பாக 80 கோடி ரூபாயயை இப்படம் கடந்துவிடும் என்கிறது கோலிவுட் பட்சி.
இதன்முலம் தனுஷின் சினிமா கேரியர் பெஸ்ட் அமைந்துள்ளது ’திருச்சிற்றம்பலம்’.