திரைக்கு வந்தது 'திருச்சிற்றம்பலம்’: ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ், அனிருத்

திரைக்கு வந்தது 'திருச்சிற்றம்பலம்’: ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ், அனிருத்

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு இன்று அதிகாலை நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் வந்திருந்தனர். அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை ரசித்தனர்.

நடிகர் தனுஷ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார். கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன பேனரின் கீழ் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை தயாரித்துள்ளது.

இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு இன்று அதிகாலை நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் வந்திருந்தனர். அவர்கள் ரசிகர்களுடன் இணைந்து இப்படத்தைப் பார்த்து ரசித்தனர். இந்த காட்சிகள் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in