`என் பெற்றோரை துன்புறுத்தினர்; இந்தியில் பேசி மோசமாக நடத்தினர்'- சிஆர்பிஎஃப் வீரர்களால் நடிகர் சித்தார்த் வேதனை

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

தொடர்ந்து இந்தியில் பேசுவது மட்டுமல்லாமல், தன் வயதான பெற்றோரையும் துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். அரசியல் சார்ந்து சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் பல கருத்துகள் ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறும். அந்த வகையில் சமீபத்தில் அவர் மதுரை விமான நிலையத்திற்கு சென்ற போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, ``யாருமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் எங்களை சிஆர்பிஎஃப் துன்புறுத்தினார்கள். என்னுடைய வயதான பெற்றோரின் பைகளில் இருந்து காயின்களை எடுக்கும்படி சொன்னார்கள். நாங்கள் ஆங்கிலத்தில் பேச சொல்லி வேண்டுகோள் விடுத்தபோதும் தொடர்ந்து அவர்கள் இந்தியிலேயே எங்களிடம் உரையாடினார்கள்.

மிகவும் மோசமாக எங்களை நடத்தினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இப்படிதான் இந்தியாவில் இருக்கிறது என்ற நிலையையும் எங்களுக்கு உணர்த்தினார்கள். வேலையில்லாத மக்கள் எங்களிடம் இப்படிதான் தங்களின் அதிகாரத்தை எங்களிடம் காட்டுகிறார்கள்’ என்று சித்தார்த் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in