நடிகர் விஷாலுக்கும், எனக்கும் திருமணம் நடந்ததாக வதந்திகளை கிளப்பி வருகின்றனர்: பதறும் நடிகை அபிநயா

நடிகர் விஷாலுக்கும், எனக்கும் திருமணம் நடந்ததாக வதந்திகளை கிளப்பி வருகின்றனர்: பதறும் நடிகை அபிநயா

'மார்க் ஆண்டனி' படத்தில் நடிகர் விஷாலுக்கு மனைவியாகத்தான் நடித்துள்ளேன். ஆனால் எங்களுக்குத் திருமணம் நடந்ததாக புரளி கிளப்பி விடுகிறார்கள் என்று நடிகை அபிநயா கூறியுள்ளார்.

தமிழ் திரையுகில் முன்னணி நடிகரான விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். அவர் ஏற்கெனவே நடிகை வரலட்சுமியை காதலித்து பிரிந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அனிஷா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால், திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது

இந்த நிலையில் நடிகர் விஷால், 'நாடோடிகள்', 'பூஜை', 'குற்றம் 23', 'ஈசன்' போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை அபிநயாவை காதலிப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், விரைவில் திருமணம் எனவும் செய்திகள் பரவியது. தற்போது இந்த தகவலை நடிகை அபிநயா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " விஷால் மனைவியாக மார்க் 'ஆண்டனி' திரைப்படத்தில் நான் நடித்து வருகிறேன். அதுகுறித்த போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் நாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில் திருமணமாகிவிட்டது என்பது போன்றும் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். ஆனால், அது முழுவதும் பொய்யான தகவல்"என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in