நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: நடிகர் பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்

நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: நடிகர் பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்

நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள். என்னுடன் இணைந்து நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு நிலவி வருகிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

தன் தனித்துவ நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், திரைக்கு வழியே பேசி வரும் அரசியல், மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதற்குக் காரணம், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை நடிகர் பிரகாஷ் ராஜ் மிகக் கடுமையாக விமர்சித்து வருவது தான்.

இந்நிலையில், தான் அரசியல் பேசி வருவதால் தன்னுடன் நடிக்க மற்ற நடிகர்கள் அச்சப்படுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள், இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள். என்னுடன் இணைந்து நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் வருந்தவில்லை. அவர்களை இழக்க நான் தயாராகவே இருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in