பரபரக்கும் பிக் பாஸ்7... வைல்ட் கார்டில் நுழையும் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார், யார்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் நுழையும் இரண்டு போட்டியாளர்கள் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே கடுமையான டாஸ்க்குகளை பிக் பாஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில், முதல் வாரத்திலேயே எலிமினேஷன் இருந்தது. அதில் அனன்யா குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு உடல்நிலை காரணமாக பவா செல்லதுரை தானாக வெளியேறினார். இரண்டு பேர் வெளியேறியதால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என பிக் பாஸ் அறிவித்தார். ஆனால், இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும். இந்த நிலையில் பிக் பாஸில் 15 போட்டியாளர்கள்தான் இருப்பார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்க, இந்த வாரத்திலேயே இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

'ராஜா ராணி' அர்ச்சனா
'ராஜா ராணி' அர்ச்சனா

அதன்படி, சீரியல் நடிகை அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளது உறுதியாகி உள்ளது. அவரோடு மற்றொரு வைல்ட் கார்ட் போட்டியாளராக கானா பாடகரான கானா பாலா உள்ளே நுழைய உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வழக்கமாக நாட்டுப்புற பாடகர் ஒருவரை உள்ளே அனுப்புவது வழக்கம். அந்த கேட்டகிரியில் இந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரியாக கானா பாலா உள்ளே நுழைகிறார் . 'ராஜா ராணி' சீரியலில் வில்லியாக மிரட்டிய அர்ச்சனாவும், கானா பாலாவும் பிக் பாஸ் இல்லத்திற்குள் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in