இவர்கள் ஓடிடி ஹீரோக்களாம்: குத்தப்பட்டது முத்திரை

இவர்கள் ஓடிடி ஹீரோக்களாம்: குத்தப்பட்டது முத்திரை

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பல நடிகர்கள் ஓடிடிலேயே படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

கரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஏராளமான ஓடிடிகள் தலைதூக்கி இருக்கிறது. அதாவது, கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் பல நடிகர்களும் தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வந்தனர். தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அவர்கள் ஓடிடிலேயே படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் அவர்களை ஓடிடி ஹீரோக்கள் என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டது. அதுபோல் ஓடிடி தயாரிப்பாளர்கள் குழுவும் உருவாகி வருகிறது. இப்போ கோலிவுட்டில் ஆர்யா, அருண் விஜய், ஜீவா, கலையரசன், விக்ரம் பிரபு ஆகியோர் ஓடிடி நடிகர்கள் ஆகிவிட்டார்களாம்.

Related Stories

No stories found.