24 மணி நேரத்தில் சாதனை நிகழ்த்திய 'தீ தளபதி' பாடல்: கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

24 மணி நேரத்தில் சாதனை நிகழ்த்திய 'தீ தளபதி' பாடல்: கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் இடம் பெற்ற 'தீ தளபதி' பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ‘ரஞ்சிதமே’ பாடல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் ஜன. 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'தீ தளபதி' பாடல் நேற்று வெளியானது. நடிகர் சிலம்பரசன் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் யூடியூப்பில் இந்த பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in