திரையரங்கு கட்டணம் நாளை முதல் அதிரடியாக உயர்வு: புதுச்சேரி அரசு அறிவிப்பு!

திரையரங்கம்
திரையரங்கம்

நாளை முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் இரண்டு ஆண்டு வரை மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த 2020 அக்டோபர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், ரசிகர்கள் வருகை குறைவாக இருந்ததால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டது.

புதுச்சேரி ரத்னா திரையரங்கம்
புதுச்சேரி ரத்னா திரையரங்கம்

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு மனு அளித்தனர். இதனை ஏற்று கட்டண உயர்வுக்கான உத்தரவை ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, 3-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், 2-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், முதலாம் வகுப்பு 100 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. 160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ரூபாய் அதிகபட்சம் 30 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்படுறது. இந்தக் கட்டண உத்தரவு நாளை, அதாவது நவம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்!  முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in